Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.31 லட்சம் கோடி

அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.31 லட்சம் கோடி

தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்ட அக்டோபரோடு ஒப்பிடுகையில், ஜிஎஸ்டி வசூல், 3 சதவீதம் மட்டுமே அதிகரித்து, ரூ.11,661 கோடி வசூலாகி உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல், அக்டோபர் மாதத்தில் 22.90 சதவீதம் அதிகரித்து ரூ.2.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரலுக்கு பிறகு பதிவான அதிகபட்ச வசூல் இதுவாகும்.

அக்டோபர் மாதத்துக்கான தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, ரீஃபண்டு தொகையைக் கழித்த பிறகான நிகர ஜிஎஸ்டி வருவாய் 25.60 சதவீதம் அதிகரித்து ரூ.2.03 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது ரூ.1.61 லட்சம் கோடியாக இருந்தது.

உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த மொத்த ஜிஎஸ்டி வருவாய் 15.80 சதவீதம் உயர்ந்து ரூ.1.59 லட்சம் கோடியாக உள்ளது. அதேநேரத்தில், இறக்குமதி மூலம் கிடைத்த ஜிஎஸ்டி வருவாய் 42.20 சதவீதம் அதிகரித்து ரூ.72,246 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, இறக்குமதி தொடர்பான வரி வசூலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும்.

நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களான ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 13.20 சதவீதம் அதிகரித்து, ரூ.14.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.13.05 லட்சம் கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் நிகர ஜிஎஸ்டி வருவாய் 12.6 சதவீதம் அதிகரித்து ரூ.12.69 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.11.27 லட்சம் கோடியாக இருந்தது.

அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி ரீஃபண்டு தொகை 6.50 சதவீதம் அதிகரித்து ரூ.27,934 கோடியாக உள்ளது. இதில் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கான ரீஃபண்டு ரூ.14,007 கோடியாகவும், ஏற்றுமதி தொடர்பான ரீஃபண்டு ரூ.13,927 கோடியாகவும் இருந்தது. ரீஃபண்டு தொகையைக் கழித்த பிறகு, உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் 16.40 சதவீதம் உயர்ந்து ரூ.1.45 லட்சம் கோடியாகவும், இறக்குமதி தொடர்பான நிகர ஜிஎஸ்டி வருவாய் 56.20 சதவீதம் அதிகரித்து ரூ.58,319 கோடியாகவும் உள்ளது.

மகாராஷ்டிரா முதலிடம்

மாநிலங்களின் ஜிஎஸ்டி வசூலில் மகாராஷ்டிரா ரூ.35,150 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தைவிட 13 சதவீதம் அதிகமாகும். கர்நாடகத்தில் 18 சதவீதம் உயர்ந்து ரூ.15,922 கோடியாகவும், குஜராத்தில் 16 சதவீதம் உயர்ந்து ரூ.13,516 கோடியாகவும் வசூலாகியுள்ளது. உத்தர பிரதேசத்தில் 24 சதவீதம் அதிகரித்து ரூ.10,235 கோடியாகவும், ஹரியானாவில் 17 சதவீதம் அதிகரித்து ரூ.11,529 கோடியாகவும் உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்ட அக்டோபரோடு ஒப்பிடுகையில், ஜிஎஸ்டி வசூல், 3 சதவீதம் மட்டுமே அதிகரித்து, ரூ.11,661 கோடி வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.11,588 கோடியை வசூல் செய்திருந்தது. அதேநேரத்தில், சிக்கிமில் 28 சதவீதம், புதுச்சேரியில் 7 சதவீதம் வசூல் சரிந்துள்ளது.

மாநிலங்களுக்கு வரிப் பங்கீடு மற்றும் தீர்வுக்குப் பிறகு கிடைக்கும் எஸ்ஜிஎஸ்டி வருவாய் அக்டோபரில் 13 சதவீதம் உயர்ந்து ரூ.1.03 லட்சம் கோடியாக உள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் இந்த வருவாய் 15 சதவீதம் அதிகரித்து ரூ.6.82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.


முந்தைய செய்தி
கைதிகள் தப்பியோடிய விவகாரம்: சிறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்
அடுத்த செய்தி
ஆந்திராவை நோக்கி நகரும் ‘முரசு’ புயல்

தொடர்புடைய செய்திகள்